eetrarai blogs

Girl baby

I have been visiting Puliyanur twice a week to meet with pregnant women. Due to continuous rain this week, I couldn’t make the visit. Yesterday was the first time I went since last Wednesday. The pregnant woman I met on the very first day of Eetrarai has given birth to a baby girl.

Fifteen days before her due date, she experienced labor pain on Sunday evening. When she went to the nearby Primary Health Center, they advised her to be taken to a bigger hospital. They went to Dharmapuri Government Hospital. There she gave birth to the girl baby via cesarean section. Both mother and baby are healthy. As of now, we only know that the baby weighs 3.9 kg, but the reason for the cesarean section is unknown. Let’s keep them in our prayers for their well-being.

Beyond genuine medical reasons for cesareans, there are some myths circulating among people. A woman I know once said that the doctors performed a cesarean because they told her that, due to her excess weight, she wouldn’t have the strength to push the baby out. How false that information is!

What are some similar myths about childbirth that you have come across? Write to eetrarai@gmail.com. It could be of great help to others.


வாரத்தில் இரண்டு நாட்கள் புலியானூர் சென்று கர்பமானவர்களை சந்தித்து வந்துகொண்டிருந்தேன். இந்த வாரம் தொடர் மழையால் செல்ல இயலவில்லை. கடந்த புதனுக்கு பிறகு நேற்று தான் சென்றேன். ஈற்றரை தொடங்கிய அன்று முதன் முதலாக சந்தித்த கர்பவதிக்கு பெண் மகவு பிறந்துள்ளது.

இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் ஞாயிறு மாலை வலி வந்திருக்கிறது. அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது பெரிய மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்.

குழந்தை 3.9 கிலோ எடை என்ற தகவல் வரை மட்டும் இப்பொழுது தெரிந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கான காரணம் தெரியவில்லை. இருவரின் நலனுக்காக நம் பிரார்த்தனைகள்.

அறுவை சிகிச்சைக்கான உண்மையான மருத்துவக் காரணங்களைத் தாண்டி சில கற்பனை காரணங்களும் மக்களிடையே பரவலாக உள்ளது. எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு அவள் எடை கூடுதலாக இருப்பதால் குழந்தையை வெளியே தள்ளும் சக்தி இருக்காது என்று கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக கூறினாள். எவ்வளவு பொய்யான தகவல்.

இது போன்று உங்களுக்கு தெரிந்த பிரசவத்தின் பொய்யான தகவல்கள் என்று எதை கூறுவீர்கள்? எழுதுங்கள் eetrarai@gmail.com என்ற முகவரிக்கு.

SolaganaiTribalMeetforKnowledge

For the past two months, I have been constantly traveling and conducting back-to-back sessions at a fast pace. After attending the Vishnupuram Literary Event in Coimbatore, I traveled to a handloom center in Chennimalai, Erode, and from there, I went to a village called Solakani in the Anthiyur Hills. In this hill village, where indigenous communities reside, a major well-digging project is being carried out as part of the village well restoration initiative.

I visited the village to learn about the pregnancy experiences, traditions, practices, food habits, and child-rearing methods of the tribal women living there. I met a 90-year-old grandmother who was still strong and actively harvesting aariyam (finger millet/ragi). Sitting and talking with them made time fly by—they had endless stories and experiences to share. It was truly an enriching experience.

For them, childbirth is not a separate or extraordinary event; it is just another natural part of life. They do not go out of their way to prepare for it. In fact, their biggest concern is having to leave the hills and travel down to a hospital for delivery. The very mention of a hospital brings fear, as they believe that hospitals will immediately resort to surgery.

I will definitely document in detail the fascinating childbirth conversations I had with them.

Learning and teaching should always continue. We must keep working and staying active—otherwise, both our body and mind will fall into illness. This thought, emphasized by Sivaraj Anna, continues to be a driving force that keeps us moving forward without exhaustion.

Starting today, I will be traveling to Bengaluru for a full month of yoga training. I will be training at S-VYASA UNIVERSITY, India’s top yoga university. As a result, I will not be conducting any classes or taking emergency calls during this period. By the end of February, I will return, and all sessions will resume in March. I strongly feel that this one-month period will be a transformative phase for me.

Thank you all for your support!


கடந்த இரு மாதங்களாக தொடர் பயணங்கள், தொடர் வகுப்புகள் என்று வேகமாக ஓட வேண்டியிருந்தது. கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு முடித்து, ஈரோடு சென்னிமலையில் உள்ள நூற்பு சென்றுவிட்டு அங்கிருந்து அந்தியூர் மலையில் உள்ள சோளகனை என்ற கிராமத்திற்கு சென்றோம். மலைவாழ் மக்கள் வாழும் அந்த ஊரில் ஊர்கிணறு புணரமைப்பு இயக்கத்தால் மிகக்கடுமையான கிணறு ஒன்றை வெட்டி பணி செய்யப்படுகிறது.

அங்குள்ள பழங்குடி பெண்களின் பிரசவகால அனுபவங்கள், பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், உணவு, குழந்தை பராமரிப்பு பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள சென்றேன். 90 வயது பாட்டி இன்னும் உடல் வலிமையுடன் ஆரியம் என சொல்லப்படும் ராகியை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் அமர்ந்து பேசினால் நேரம் போவதே தெரியாமல் பேசலாம். அவ்வளவு கதைகள் அனுபவங்கள். மலைப்பாக இருந்தது.

அவர்களுக்கு பிரசவம் என்பது தனி அனுபவம் அல்ல. அது அவர்களின் அன்றாடத்தில் ஒரு பகுதி போல, வாழ்வில் அது இயல்பான ஒன்று. அதற்காக அவர்கள் தனியாக எதுவும் மெனக் கெடுவதில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு மலையை விட்டு கீழே வந்து மருத்துவமனைக்கு செல்வதில் தான் அத்துணை தயக்கம். மருத்துவமனை என்றாலே ஆபரேஷன் செய்துவிடுவார்கள் என்பது அவர்களின் என்ன.
நிச்சயம் அவர்களுடன் நடந்த பிரசவகால உரையாடல்களை தனியாக பதிவு செய்கிறேன்.

கற்றலும் கற்பித்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம், நம் மனது அனைத்தும் நோய்க்குள் சென்றுவிடும். அதனால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறும் சிவராஜ் அண்ணாவின் சொற்கள் எங்களை சோர்வில்லாமல் தொடர்ந்து இயங்க செய்யும் உந்து சக்தி.

இன்றிலிருந்து ஒரு மாதம் முழுமையாக யோகா பயிற்சிக்கு பெங்களுரு செல்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த யோகா பல்கலைகழகமான S-VYASA UNIVERSITY க்கு பயிற்சிக்கு செல்வதால் இந்த ஒரு மாத காலத்திற்கு எந்த வகுப்புகளும், அவசர அழைப்பை ஏற்கும் வாய்ப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். February மாதம் முடிந்து மீண்டும் மார்ச் மாதம் அனைத்து வகுப்புகளும் தொடங்கும். இந்த ஒரு மாத காலம் மிகப்பெரிய திறப்பை கொடுக்கும் என்ற தீர்க்கமாக தோன்றுகிறது. அனைவருக்கும் மிக்க நன்றி.